உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2023-01-30 15:18 IST   |   Update On 2023-01-30 15:18:00 IST
  • கல்லூரியில் 28-ந்தேதி அன்று பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும் மாணவ மாணவியர்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தனர்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28-ந்தேதி அன்று பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் வரவேற்புரை மற்றும் , கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார் . சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்ஜெகநாதன் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 12- வது பட்டமளிப்பு விழாவில் அறிஞர் அண்ணா கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பில் 1130 மாணவ, மாணவியர்களும், முதுகலை பட்டமேற் படிப்பில் 260 மாணவ , மாணவியர்களும், ஆய்வியல் நிறைஞர் ஆராய்ச்சி படிப்பில் 70 மாண,வ மாணவியர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

இதையடுத்து நேற்று 13-வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார்.

விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் மற்றும் கல்விப் புல முதன்மையர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பட்டங்களை வழங்கினார்.

அவருடைய சிறப்புரை யில், மாணவ மாணவி யர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாட அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர் கல்வியில் ஆராய்ச்சி அறிவில் சிறந்து விளங்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் போல அறிவியல் துறையில் விஞ்ஞானியாக திகழ வேண்டும். பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.

தேர்வுகளுக்கு முன் தயாரிப்பு மற்றும் திட்டமிடுதல் முக்கியமானதாகும் .கல்வியினால் வறுமை நிலையைப் போக்க முடியும். பட்டப் படிப்புகளுடன் பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இளங்கலைப் பட்டப்படிப்பில் 1500 மாணவ, மாணவி யர்களுக்கும் , முதுகலைப் பட்டப்படிப்பில் 500 மாணவ, மாணவியர்களுக்கும், ஆய்வில் நிறைஞர் ஆராய்ச்சிப் படிப்பில் 200 மாண,வ மாணவியர்களுக்கும் பட்டங்களை வழங்கினார். விழாவில் வேளாங்கண்ணி கல்விக் குழுமம் மற்றும் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளர் கூத்தரசன், கல்லூரியின் செயலாளர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜயலட்சுமி மற்றும் வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் அனைத்து முதல்வர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும் மாணவ மாணவியர்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக அளவில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்க பதக்கங்களைப் பெற்றனர். விழா இனிதே நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.

Tags:    

Similar News