கிருஷ்ணா கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், நாட்டிற்கும் சிறந்த ஆளுமைகளாக செயலாற்ற வேண்டும்
- பிற மாநில மாணவர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற்று உயர்கல்வி பயில்வது போல் நமது மாநில கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கல்லூரியின் தாளாளர், பெருமாள் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் வளர்ச்சிப் பற்றிய அறிக்கையை வாசித்தார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்து விழாப் உரையாற்றினார்.
பின்னர் பல்கலைக்கழக அளவில் முதன்மைத் தேர்ச்சிபெற்ற மாண வர்களுக்கு பட்டம் வழங்கி பதக்கம் அணிவித்துப் பாராட்டினார்.
தாளாளர் பெருமாள் தனது தலைமை உரையில், பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், நாட்டிற்கும் சிறந்த ஆளுமைகளாக செயலாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பேசும்போது, பிற மாநில மாணவர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற்று உயர்கல்வி பயில்வது போல் நமது மாநில கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டும் என வாழ்த்தினார்.
கலை, அறிவியல், மேலாண்மை, வணிகவியல் ஆகிய புலங்களில் தேர்ச்சிபெற்ற சுமார் 800 இளங்கலை, 400 முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறைத்தலைவர்கள், பேராசி ரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டி னை நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.