உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

விளாத்திகுளம் அருகே 1 கோடி மரங்கள் நடும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

Published On 2023-08-29 08:58 GMT   |   Update On 2023-08-29 08:58 GMT
  • விளாத்திகுளம் பகுதிகளில் மரங்கள் நடும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் தனது சொந்த நிதியிலிருந்து 7 அடி உயர மரக்கன்றுகளும், அவற்றைப் பாதுகாப்பதற்கான வலைகளும் வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் உறுதியளித்தார்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

இதில் புதூர் ஊராட்சி ஒன்றிய மணியக்காரன்பட்டி ஊராட்சி, தவசலிங்கபுரம்,

மணியக்காரன்பட்டி, சக்கனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 1 கோடி மரங்கள் வளர்ப்பதன் முன்னெடுப்பாக மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. கிராம மக்களை நேரில் சந்தித்து வேப்பமரம், புங்கைமரம் உள்ளிட்ட மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும் மரம் நடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் கிராம மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் தனது சொந்த நிதியிலிருந்து 7 அடி உயர மரக்கன்றுகளும் அவற்றைப் பாதுகாப்பதற்கான வலைகளும் வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் உறுதியளித்தார்.

கூட்டத்தில் புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஊராட்சி தலைவர் நாகராணி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி, இம்மானுவேல், தொழிலதிபர் சுப்பா, ஊராட்சி துணை தலைவர் ராமசுப்பு, கிளை செயலாளர்கள் சூர்பாண்டி, சுப்பையா, பிரதிநிதி பெரிய தங்கம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News