உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவிலில் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடந்த போது எடுத்தபடம்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவிலில் ரூ.2 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி

Published On 2023-04-07 14:07 IST   |   Update On 2023-04-07 14:07:00 IST
  • கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 தளத்துடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைபிரியா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ.2 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் 2 தளத்துடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணியை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயற்பொறியாளர் கணேசன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் சத்யன், உதவி பொறியாளர் ரெங்கசாமி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி,

இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைபிரியா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கவுதம், தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகி சேதுரத்தினம், பொறியாளர் அணி ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா, சண்முகவேல், லவராஜா, விஜயக்குமார் (பா.ஜ.க.), சுதாகுமாரி, உலகராணி, சித்ரா, புவனேஸ்வரி, தி.மு.க. நிர்வாகிகள் மணி, மாரிச்சாமி, சின்னத்துரை, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News