உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-25 15:24 IST   |   Update On 2023-07-25 15:24:00 IST
  • தேன்கனி க்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசினார்.

தேன்கனிக்கோட்டை,

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தேன்கனி க்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசினார்.

மாநில செயலாளர் அன்வர், பொதுக் குழு உறுப்பினர் சீனிவாசன், நகர தலைவர் பால்ராஜ், முன்னாள் நகர தலைவர் தாஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் மஞ்சு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆதாம், லாசர், சண்முகம், துரை, அஜ்மல், முகமது நூருல்லா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News