உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

மத நல்லிணக்க விநாயகர் வைக்க அனுமதி கேட்டு காங்கிரசார் மனு

Published On 2022-08-16 07:43 GMT   |   Update On 2022-08-16 07:43 GMT
  • திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
  • மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விநாயகர் சிலைகளை காங்கிரஸ் சார்பில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதிக்க மனு அளித்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் தலைமையில் மண்டல தலைவர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

நாடு முழுவதும் 31-ந் தேதி விநாகயர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள 48 வார்டுகள், 9 ஊராட்சி பகுதிகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விநாயகர் சிலைகளை காங்கிரஸ் சார்பில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளோம்.

அதன் பின்பு இந்த சிலைகள் அனைத்தும் மும்மத தலைவர்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அமைதியான முறையில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த சிலை அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எஸ்.பி. பாஸ்கரனிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News