ராகுல்காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
- தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் லந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
- அப்போது அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
கிருஷ்ணகிரி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. அவதூறு கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் லந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, கிருஷ்ணகிரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மாரியப்பன், இர்பான், அஜிசுல்லா, அமாவாசை, பாண்டுரங்கன், சபீர், முனுசாமி, பாஸ்கர், மகபூப், சுபேர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அந்த நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.