சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
சேலம் இரும்பாலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
- தமிழ்நாடு அமைச்சரவையில் நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் முடக்கி வைத்திருக்கிறார்.
சேலம்:
தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் முடக்கி வைத்திருக்கிறார்.
இது தமிழ்நாடு அரசுக்கு விரோதமானது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் எதிரானது. எனவே ஆளுநரை பதவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் கிழக்க மாவட்ட காங்கிரஸ், வீரபாண்டி சட்டமன்றம் சார்பில் இரும்பாலை 2-வது கேட்டில் மாவட்டத் தலைவர் அர்த்தனாரி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரபாண்டி வடக்கு வட்டார தலைவர் செட்டியார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூடுதுறை கனகராஜ், அமைப்புசாரா மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.பி.கிருஷ்ணா, வீரபாண்டி தெற்கு வட்டார தலைவர் ஆட்டையாம்பட்டி சாமி, பனமரத்துப்பட்டி மேற்கு வட்டார தலைவர் வெங்கடேஷ், ஏற்காடு வட்டார தலைவர் ஜெய்ஆனந்த், சேலம் வட்டார தலைவர் செல்வ குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரீத்தா, இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவு தலைவர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐ.என்.டி.சி தேவராஜ், கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் கார்த்தி, வட்ட முத்தம்பட்டி சேகர், பொன்னுசாமி, ஜெயபால், சேகர், அறிவழகன், சேவி, வீரமுத்து, நாகராஜ், இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், தீனதயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஆத்தூர் மணிக்கூண்டு அருகிலும், தலைவாசல் தபால் நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.