கிருஷ்ணகிரியில், காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஏகம்ப வாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் லண்டன்பேட்டை பி.எஸ். என்.எல். அலுவல கம் எதிரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு காங்கி ரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ரகமத் துல்லா தலைமை தாங்கி னார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார்.
இதில் ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஏகம்ப வாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சரவ ணகுமார், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் நாகராஜ், ராகுல் பேரவை மாவட்ட தலைவர் குட்டி என்கிற விஜயராஜ், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஆஜித் பாஷா, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமல க்கண்ணன், மாவட்ட நிர்வா கிகள் ஏழுமலை, அமா வாசை, முன்னாள் வட்டார தலைவர் ஷான வாஸ், சந்திரசேகர், அஜிசு ல்லா, நித்தியானந்தா, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.