உள்ளூர் செய்திகள்

நகராட்சி பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகள்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2022-09-30 10:04 GMT   |   Update On 2022-09-30 10:04 GMT
  • நாமக்கல் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.
  • புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் :

நாமக்கல் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின் பேரில் நகர் நலஅலுவலர் டாக்டர் பரிதாவாணி, சுகாதார துப்புரவு அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் நாமக்கல் கடைவீதி, நந்தவனத்தெரு, மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ 6,000 அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News