உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர்.

கள்ளக்குறிச்சி தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்துதிண்டுக்கல்லில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-08-30 12:24 IST   |   Update On 2023-08-30 12:24:00 IST
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
  • மாவட்டம் முழுவதும் 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரிஷிவந்தயம் எம்.எல்.ஏ. தலையீடு காரணமாக சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகா அலுவலகம், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்கள் மற்றும் 3 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் தலைமையில், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைத்தலைவர் விஜயராகவன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறையினரின் போராட்டதால் கலைஞரின் மகளிர் உரிமை திட்ட களப்பணி மற்றும் அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News