உள்ளூர் செய்திகள்

மாவட்ட தலைவர் கைதுக்கு கண்டனம்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் அமைப்பினர் திடீர் சாலை மறியல்

Published On 2022-09-22 13:36 IST   |   Update On 2022-09-22 13:36:00 IST
  • மாவட்ட தலைவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  • தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமரசப்படுத்தினர்.

கடலூர்:

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அகமதுவை தேசிய குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் காட்டுமன்னார்கோவிலில் கைது செய்தனர். இந்த தகவல் காட்டுமன்னார்கோவில் மற்றும் லால்பேட்டை பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒன்று திரண்டனர்.

அவர்கள் பயஸ் அகமதுவை கைதுசெய்த அதிகாரிகளை கண்டித்து லால்பேட்டையில் சிதம்பரம் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விைரந்து சென்று அவர்களை சமரசப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News