உள்ளூர் செய்திகள்

பணிநீக்கம் செய்யபட்ட அலெக்சாண்டர்.

பெற்றோர்களிடம் கட்டாய பணம் வசூல்; அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

Published On 2023-06-21 14:47 IST   |   Update On 2023-06-21 14:47:00 IST
  • தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளி மேம்பாட்டு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய் வரை கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டாய நிதி வசூல் செய்து மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடி குறித்து வந்த புகாரின் பேரில் ஏற்கனவே மாவட்ட கலெக்டர், தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கையும், சுற்றறிக்கையும் அனுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில், நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News