உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனுவுடன் வந்த நாம் தமிழர் கட்சியினரை படத்தில் காணலாம்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்-நாம் தமிழர் கட்சியினர் மனு

Published On 2023-06-13 14:32 IST   |   Update On 2023-06-13 14:32:00 IST
  • தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
  • கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கண்டன கோஷம் எழுப்பி உறுதிமொழி எடுத்துக்கொண்டு மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

தருமபுரி,

வேலூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா என்பவருடைய தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில் மதுக்கடைகளே இருக்கக்கூடாது என கருதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக அனைத்து மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுக்க அறிவுறுத்தினார்.

இதனையடுத்து தருமபுரி அரூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை பொருளாளர் சாந்தி தலைமையில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று மனுவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கண்டன கோஷம் எழுப்பி உறுதிமொழி எடுத்துக்கொண்டு மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

அந்த புகார் மனுவில் மக்களின் நலன்கருதியும் எதிர்கால இளைய தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை கருதியும் தமிழகம் முழுவதும் மதுவில்லா மாநிலமாக மாற்ற அரசு முன்வர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News