உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் பதவி ஏற்பு விழா

Published On 2023-07-21 15:31 IST   |   Update On 2023-07-21 15:31:00 IST
  • தேர்தலில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு நேற்று பதவி ஏற்பு மற்றும் பதவி பிரமான விழா நடைபெற்றது.
  • பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மொரப்பூர், 

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் கடந்த 6-ம் தேதி அன்று நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு நேற்று பதவி ஏற்பு மற்றும் பதவி பிரமான விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி மாணவர்களை உறுதி மொழி ஏற்க செய்தனர்.

பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீணா மற்றும் நிர்வாக அலுவலர் கஸ்தூரி வெற்றி பெற்றவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கினர்.

உடற்கல்வி ஆசிரியர் செல்வம் மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இவ்விழா இனிதே நிறைவடைந்தது.

Tags:    

Similar News