உள்ளூர் செய்திகள்

லூர்து சேவியர் அடிகளார் கல்லறை புனிதம் செய்து வழிபாடு நடைபெற்றது.

பூண்டி மாதா பேராலயத்தில் லூர்துசேவியர் அடிகளார் நினைவு நாள் அனுசரிப்பு

Published On 2023-04-18 13:47 IST   |   Update On 2023-04-18 13:47:00 IST
  • பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
  • கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கப்பட்டிருந்தது.

பூதலூர்:

பூண்டி மாதா பேராலயத்தில் 1955 ஆம் ஆண்டு முதல் பங்கு தந்தையாக பணியாற்றியவர் லூர்து சேவியர் அடிகளார்.

இவரது அருட்பணி காலத்தில் பூண்டி மாதாஆலயத்தின் புகழ் பரவ தொடங்கியது.

தன்னை நாடி வந்தவர்களை எல்லாம் ஆதரித்து அன்னையிடம் ஜெபியுங்கள் எல்லாம் நலமாக முடியும் என்று ஆறுதல் அளித்தவர் லூர்து சேவியர் அடிகளார்.

இவர் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி மறைந்தார்.

அவரது உடல் பூண்டி மாதா பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

மறைந்த லூர்து சேவியர் அடிகளாரின் 52- வதுநினைவு நாள் பூண்டி மாதா பேராலயத்தில் அனுசரிக்கப்பட்டது.

பூண்டி பேராலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , மெழுகுவர்த்தி ஏந்தி வைக்கப்பட்டிருந்தது .

இதனை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்தார் . துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் , உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆச்சனூர் பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

திரளான பக்தர்கள் லூர்து சேவியர் அடிகளார் கல்லறைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கினார்கள்.

Tags:    

Similar News