உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவனின் சைக்கிள் பயணத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரி மாணவனின் சைக்கிள் பயணம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-08-19 14:42 IST   |   Update On 2022-08-19 14:42:00 IST
  • புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையிலிருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
  • எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

நாகப்பட்டினம்:

நாகை அடுத்துள்ள ஆரியநாட்டுதெரு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிமாறனின் மகன் ஹரிஹரமாதவன். தனியார் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் படித்து வரும் இவர் புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் இருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இவரது சைக்கிள் பயணத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவன் ஹரிஹர மாதவன் நாகையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி அங்கிருந்து கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2000 கிலோமீட்டர் சைக்கிளிலேயே தனது பயணத்தை தொடர்கிறார்.

இதன் மூலம் வழி நெடுகிலும் சந்திக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News