உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-03-21 15:08 IST   |   Update On 2023-03-21 15:08:00 IST
  • மணிமேகலை (வயது 20) . இவர் சேலம் மாவட்டம் தனியார் கல்லூரியில்3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மணிமேகலை நேற்று தோழியின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உறவினர் வீடுகளிலும் அருகில் உள்ள இடங்களில் தேடினர்,
  • தேடிப் பார்த்தும் கிடைக்காததால்ர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை தாய் சாந்தி புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவருடைய கணவர் கோம்பையன். இவர்களுக்கு மணிமேகலை (வயது 20) என்ற மகள் உள்ளார். இவர் சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில்3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிமேகலை நேற்று தோழியின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உறவினர் வீடுகளிலும் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்ர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை தாய் சாந்தி புகார் அளித்தா. போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமேகலையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News