உள்ளூர் செய்திகள்

விபத்தில் கல்லூரி பஸ் மீது மோதிய ஜீப் நொறுங்கி கிடக்கும் காட்சி.

வடமதுரை அருகே கல்லூரி பஸ்-ஜீப் மோதல்

Published On 2023-03-30 13:45 IST   |   Update On 2023-03-30 13:45:00 IST
  • படுகாயமடை ந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • வடமதுரை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்

வடமதுரை:

திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸை குளத்தூரை சேர்ந்த அம்பிகா(வயது32) என்ற பெண் டிரைவர் ஓட்டிவந்தார். இதேபோல் ஒரு ஜீப்பில் தனியார் பள்ளி தாளாளர் பெருமாள்(55) தனது குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார்.

பாறைப்பட்டி பிரிவு அருகே திடீரென ஜீப் கல்லூரி வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் பெருமாள், அவரது மருமகள் லாவண்யா, ஒரு வயது பேரன் மற்றும் கல்லூரி வாகனத்தில் வந்த டிரைவர் அம்பிகா, கல்லூரி மாணவி ஒருவர் ஆகியோர் படுகாயமடை ந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் கல்லூரி பஸ்ஸில் வந்த மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

Tags:    

Similar News