உள்ளூர் செய்திகள்

நவமால் மருதூரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மரக்கன்றுகளை நட்டார்.

நவமால்மருதூர் ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அரசின் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

Published On 2022-09-10 14:16 IST   |   Update On 2022-09-10 14:16:00 IST
  • நவமால்மருதூர் ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அரசின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • கண்டமங்கலம்யூனியன் தலைவர்வாசன், மாவட்டகலெக்டருடன் ஆய்வில் கலந்து கொண்டு கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை பற்றிவிளக்கினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நவமால்மருதூர் ஏரி கரையோர பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணி திட்டத்தில் நடைபெறும் இடத்திற்கு சென்றுபணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

கண்டமங்கலம் யூனியன் தலைவர்வாசன், மாவட்டகலெக்டருடன் ஆய்வில் கலந்து கொண்டு கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை பற்றிவிளக்கினார். அவருடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சிஅலுவலர் சண்முகம்,ஒன்றிய பொறி யாளர் அறிவொளி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி மாரிமுத்து, கிளைசெயலாளர் முனு சாமி, துணை தலைவர் ரேகாகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News