உதவி மைய மனுக்கள் பிரிவில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
முதல்வர் முகவரி திட்டத்தில் தீர்க்கப்படாத மனுக்கள் குறித்து உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- முதல்வர் முகவரி திட்டத்தில் தீர்க்கப்படாத மனுக்கள் குறித்து உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- புதிய இணையதளம் வழியாகவும், இ-சேவை மையம் மூலமாக வரபெற்ற மனுக்கள் தொட ர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறைதீர்க்க ப்பட்டு வருகிறது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சரின் முகவரி துறையின் கீழ் செயல்பட்டு வரும் உதவி மைய மனுக்கள் தர கண்காணிப்பு பிரிவில் கலெக்டர் முரளிதரன் மனு தாரர்களை தொலைபேசி யில் அழைத்து குறைகளை கேட்டறிந்தார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி உங்கள் தொகுதி யில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து முதல்-அமைச்சரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் புதிய இணையதளம் வழியாகவும், இ-சேவை மையம் மூலமாக வரபெற்ற மனுக்கள் தொட ர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. அம்ம னுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறைதீர்க்க ப்பட்டு வருகிறது.
கோரிக்கை, நிராகரி க்கப்பட்டது என்ற 2 வகைப்பாடு மனுக்களை எடுத்துக்கொண்டு குறைதீர்க்கப்பட்டதா? என்று கலெக்டர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயமங்கலத்தை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவரிடம் கேட்டறிந்தார். அவர் தனக்கு ரேசன் கடைமூலமாக 20 கிலோ அரிசி தொடர்ந்து கிடைக்க ப்பெற்றது எனவும் முதல்-அமைச்சர் தனிபிரிவுக்கு மனு செய்யப்பட்டதால் பயன்பெற்றதாக தெரி வித்தார். மற்றொரு பெண்மணியும் இவ்விதம் பயன்பெற்றதாக தெரி வித்தார்.
மேலும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்து மனு தாரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அத ற்கான காரணம் தெரிந்து உரிய அலுவல ர்களை அழைத்து நிராகரிக்க ப்பட்டதில் உள்ள குறை களை மறுஆய்வு செய்ய க்கேட்டு க்கொண்டார்.
இவ்விதம் மாவட்ட கலெக்டர் தாமே தொலை பேசியில் மனுதாரர்களிடம் நேரில் தொடர்பு கொண்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.