உள்ளூர் செய்திகள்

சின்னமனூர் நகர்ப்பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

சின்னமனூர் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2023-08-25 06:38 GMT   |   Update On 2023-08-25 06:38 GMT
  • சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
  • கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சின்னமனூர்:

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

சின்னமனூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.114.29 லட்சம் மதிப்பீட்டில் சங்கிலி தேவன் குளம் புனரமைக்க ப்பட்டதையும், ரூ.65.97 லட்சம் மதிப்பீட்டில் 3.681 கி.மீ தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகளையும், சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.28.58 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட நீர்தேக்க த்தொட்டி, பொன் நகர் பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க த்தொட்டி கட்டுமானப் பணிகளையும், கண்ண ம்மாள் கார்டன் பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகளையும், குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நகராட்சி திட்டப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வருவத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் கைதி பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, சமுதாயப் பணி பதிவேடு, நடப்புத்தாள் பதிவேடு, சுற்றுக்காவல் பதிவேடு, மாதிரி பணி பதிவேடு, சீதன பதிவேடு, பொது நாட்குறிப்பு பதிவேடு மற்றும் நடப்பு தாள் பதி வேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார்.

மேலும், கண்காணிப்பு கேமரா சரியாக இயங்கு கிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்ட றிந்தார்.

ஆய்வின்போது சின்ன மனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் பன்னீர், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News