உள்ளூர் செய்திகள்
குழந்தைகள் மையங்களில் கலெக்டர் ஆய்வு
- பரமத்தி வேலூர் வட்டம், படமுடிபாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
- குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், படமுடிபாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் குழந்தைகளுக்கு வழங்கும் இணை உணவு, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம் ஆகியவை குறித்து அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காவேட்டிபட்டி குழந்தைகள் மையத்தில் சத்துணவின் தரம், குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின் படி உணவு வகைகள் வழங்கப்படுகின்றதா எனவும், பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும், மேலும் குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.