உள்ளூர் செய்திகள்

தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.

நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2022-07-01 06:48 GMT   |   Update On 2022-07-01 06:48 GMT
  • புத்தக திருவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டிருந்தது.
  • வருகிற 4-ம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாகப்பட்டினம்:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நாகை யில் நடைபெறும்புத்தக திருவிழாவில், பொன்னி யின் செல்வன், பாரதியார் கவிதைகள், நீதிநூல் கஞ்சியம், சிறுகதைகள் என இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டி ருந்தது.

கடந்த 24ம் தேதி துவங்கிய புத்தக கண்காட்சி ஜூலை 4-ம் தேதி வரை 10, நாட்கள் நடைபெறும் புத்தகக் திருவிழாவின் நிகழ்ச்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். ஆண்டவர் கல்வி நிறுவனங்களின் முதல்வர் எஸ்.நடராஜனன் உடன் உள்ளார்.

Tags:    

Similar News