உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் நடைபெறாத விற்பனை கூடத்திற்கு சந்தை கட்டணம் வசூல்

Published On 2023-05-04 08:36 GMT   |   Update On 2023-05-04 08:36 GMT
  • சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது.
  • இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை இந்த விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது. இந்நிலையில் தற்போது விற்பனைகூடம் வயலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தினால், கடந்த 60 ஆண்டு காலமாக, இப்பகுதி விவசாயிகளுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் எந்தவித சேவையும் செய்யவில்லை.

விற்பனைக்கூடத்திற்கு, வெளியே நடக்கும் வணிகத்திற்கு மட்டும் சந்தை கட்டணம் வசூலித்து வருகின்றனர். விற்பனைக்கூடம் வெறும் கட்டண வசூலிப்பு அலுவலகம் போல் மட்டும் செயல்பட்டு வருகின்றது. சரியான முறையில் இந்த விற்பனைகூடம் செயல்பட்டால் இங்குள்ள விவசாயிகளும் வணிகர்களும் விற்பனை கூடத்தின் சேவையைப் பெற்று பயன்பெறுவர். இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு நிரந்தரமாக்கவும், சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விற்பனை க்கூடம் அமைக்கவும் அங்கு நடைபெறும் வணிகத்திற்கு மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்சி செய்யும் என வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News