உள்ளூர் செய்திகள்

கோவை–- திருச்சி சாலை மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு

Published On 2022-06-16 15:04 IST   |   Update On 2022-06-16 15:04:00 IST
  • வாகன ஓட்டிகள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
  • விபத்து நடக்காமல் தடுக்க, திருச்சி ரோடு உயர் மட்ட பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது.

கோவை

கோவை மாநகரில் 4 வழித்தடங்களில் உயர்மட்டப்பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களில் வாலிபர்கள் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் இயக்குவது வாடிக்கையாக உள்ளது. விபத்து சம்பவங்களும் அடக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த 12-ந் தேதி மாலை ரெயின்போ காலனியில் இருந்து ராமநாதபுரம் சிக்னல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பிரசாந்த் (வயது 28) என்பவர் மேம்பால சுவரில் மோதி உயிரிழந்தார்.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர் ராஜூ, சரவணன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் ஆகியோர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து விபத்து நடக்காமல் தடுக்க, திருச்சி ரோடு உயர் மட்ட பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது,

மேம்பாலங்களில் விபத்து ஏற்படுவதை தடுக்க தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள மேம்பாலங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வா கனங்களை இயக்க வேண்டும். கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் உக்கடம் பைபாஸ் சாலையில் மேம்பா லத்தின் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் எதிர்திசையில் வாகனங்களில் செல்ல கூடாது. பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வலைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்றார். 


 



 


Tags:    

Similar News