உள்ளூர் செய்திகள்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு நாளை நடக்கிறது

Published On 2023-08-20 08:33 GMT   |   Update On 2023-08-20 08:33 GMT
  • பொதுப்பிரிவினருக்கான நேரடிக்கலந்தாய்வு 22 மற்றும் 23-ந் தேதியும் நடக்கிறது.
  • மாணவர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்து நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

கோவை,

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நாளை (21-ந் தேதி) நடக்கிறது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான பொதுப்பிரிவு மற்றும் தொழிற்முறை கல்வி பாடப்பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நாளை (21-ந் தேதி) மதியம் 3 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடக்கிறது.

மேலும், பொதுப்பிரிவினருக்கான நேரடிக்கலந்தாய்வு 22 மற்றும் 23-ந் தேதியும் நடக்கிறது. நேரடி கலந்தாய்விற்கான கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 7.5 சதவீத இடஒதுக்கீடு பொதுப்பிரிவு, தொழில்முறை கல்வி பாடப்பிரிவினர், பொதுப்பிரிவினர் மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வில் பங்கேற்க குறுஞ்செய்தி மாணவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

எனவே, மாணவர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்து நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மறு பரீசிலனை செய்யப்ப டாது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News