உள்ளூர் செய்திகள்

தென்னை விவசாயிகள் சார்பில்தேங்காய் உடைக்கும் போராட்டம்

Published On 2023-07-13 14:59 IST   |   Update On 2023-07-13 14:59:00 IST
  • ஜூலை.13- தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
  • மாநில அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென்னை விவசாயிகள் சார்பில், தமிழக அரசு தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேங்காயை உடைக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டில்லிபாபு சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மாநில அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

தென்னை விவசாயிகளுக்கான பயிர் இன்ஸ்சூரன்ஸ் அனைத்து மரங்களுக்கும் மற்றும் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வினியோகத்திட்டத்தின் கீழ் தேங்காய் எண்ணெய்யை அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25-க்கும் மேற்பட்ட தேங்காயை சாலையில் உடைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

Similar News