உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின்

Published On 2023-05-18 20:44 IST   |   Update On 2023-05-18 20:44:00 IST
  • தொ.மு.ச. பேரவை பொன்விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
  • அப்போது பேசிய அவர், தொழிலாளர்களுக்கும், எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது என்றார்.

சென்னை:

தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவையின் பொன்விழா மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நமது போக்குவரத்து தொழிற்சங்கங்களை சர்வதேச தொழிற்சங்கங்களும் பாராட்டியுள்ளன.

தொழிலாளர் அணியுடன் எனக்கு எப்போதும் நட்பு கலந்த மோதல் உண்டு. மோதல் என்பதை ஊடல் என்று சொல்லலாம்.

தொழிலாளர்களுக்கும், எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது. உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க. என தெரிவித்தார்.

Tags:    

Similar News