உள்ளூர் செய்திகள்
சரத்பவார் பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- முதலமைச்சர் வேண்டுகோள்
- இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான மரியாதைக்குரிய சரத்பவார்.
- சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
2024 பாராளுமன்றப் பொதுத்தேர்தலை நோக்கி அகில இந்திய அரசியல் மையம் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான மரியாதைக்குரிய சரத்பவார், தனது கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.