உள்ளூர் செய்திகள்

திட்டச்சேரி பகுதிகளில் கடை அடைப்பு

Published On 2022-09-26 07:54 GMT   |   Update On 2022-09-26 07:54 GMT
  • 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
  • அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதன் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அதனை கண்டித்து திட்டச்சேரி, கட்டுமாவடி, புறாக்கிராமம், ப.கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேற்கண்ட பகுதிகளில் முழு கடை அடைப்பு நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் கடை அடைப்புகள் நடைபெற்றது.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News