உள்ளூர் செய்திகள்

பருவநிலை மாற்றம் கடலூரில் அதிகரிக்கும் குளிரால் மக்கள் அவதி:

Published On 2023-02-06 08:01 GMT   |   Update On 2023-02-06 08:01 GMT
  • இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
  • பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கடலூர் :

தமிழகத்தில் கடந்து சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடலில் காற்று அதிகம் இருந்ததால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது கடல் பகுதியில் அமைதி திரும்பியது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் திடீர் என பருவநிலை மாறி உள்ளது. இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த கடும் குளிர் கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விழுப்புரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்கை எரிய விட்டபடி கடும் குளிரில் நடுங்கியபடி எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள்.  குறிப்பாக கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் கடுங்குளிர் வாட்டி வதைகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடுங்குளிரை தாங்காமல் பெரும் சிரமப்பட்டு செல்கிறார்கள்.  இந்த கடும் குளிரால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் இந்த குளிரால் ஏற்படும் உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் அலுவல கத்திற்கு செல்லும் பணி யாளர்கள் அதிகாலை நேரத்தில் இந்தக் கடுங்குளிரிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து விட்டு செல்கின்றனர்.இந்த தண்ணீரால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்படும் கடும் குளிரிலிருந்து ஸ்வெட்டர் அணிந்து செல்கிறார்கள். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News