உள்ளூர் செய்திகள்

நத்தம் பேரூராட்சி நல்லாகுளத்தில் தூய்மை பணி முகாம் நடந்தது.

நத்தம் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம்

Published On 2022-07-26 12:09 IST   |   Update On 2022-07-26 12:09:00 IST
  • நத்தம் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
  • நடை பயிற்சி செல்வோரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது நல்லாகுளம். இங்கு 4 பக்க கரைகளிலும் செடி, கொடிகள் மண்டிப்போய் நடைபயிற்சி செல்வோருக்கு இடையூறாக இருந்தது.

இதை அகற்றும்படி பேரூராட்சிக்கு பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களை வைத்து செடி, கொடிகள் அகற்றபட்டது.

நடந்து முடிந்த இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, செயல் அலுவலர் சரவணக்குமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விமேரி, இளநிலை உதவியாளர் அழகர்சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு நடை பயிற்சி செல்வோரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News