உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகரில் தூய்மைப் பணிகள்; மேயர் சத்யா தொடங்கி வைத்தார்
- ஒசூர் மாநகராட்சியில் தூய்மை பணிகள் நடந்தன.
- மேயர் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஒசூர் மாநகரில் "என் குப்பை எனது பொறுப்பு' என்னும் நகரப் பகுதிகளின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார்.
ஒசூர் மாநகரத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம், பகுதி வாரியாக குப்பைகள் அகற்றப்பட உள்ளன.
15 நாட்கள் இந்த தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளான நேற்று, ஒசூர் பஸ் நிலையம் அருகே குப்பைகளை சேகரித்து ஒசூர் மாநகர மேயர் சத்யா தூய்மைப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.