உள்ளூர் செய்திகள்

தூய்மை பணி முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பென்னாகரத்தில் தூய்மை பணி முகாம்

Published On 2023-10-02 15:08 IST   |   Update On 2023-10-02 15:08:00 IST
  • பென்னாகரத்தில் தூயமை பணி முகாம் நடத்தப்பட்டது.
  • செயல் அலுவலர் கீதா தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை பணி முகாம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. பென்னாகரம் பேரூ ராட்சி நிர்வாகம், பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள், அரசு மருத்துவமனையின் ஆயுஷ்மான் கேம்பைன் பணியாளர்கள் ஒன்றி ணைந்து ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேர தூய்மை பணி நடைபெற்றது.

இதற்கு மருத்துவம் ஊரக பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமை வகித்தார். பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பேரூராட்சி பணியாளர்கள், மருத்துவமனை பணியா ளர்கள் ஆகியோர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மருத்துவமனை வளாகம், மருத்துவப் பிரிவுகளின் பகுதிகள், தற்காலிக பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பென்னாகரம் வாரச்சந்தை என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

இதில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கனிமொழி, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தூய்மைப் பணியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை 35 வகையாக தரம் பிரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News