உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறில் மோதல்- 2 பேர் கைது
- நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- வாக்குவாதம் முற்றி நஞ்சுண்டன், சுமாவை தாக்கி மிரட்டல் விடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெல்லரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மது. இவரது மனைவி சுமா (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (39). இரு குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரு குடும்பத்தின ரிடையே மீண்டும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில்
இதல் சுமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,
இது குறித்து சுமா கொடுத்த புகாரின் பேரில் நஞ்சுண்டன், வடிவேல் ஆகிய 2 பேரை கேஆர்பி டேம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.