உள்ளூர் செய்திகள்

இருதரப்பினரிடையே மோதல்-5 பேர் கைது

Published On 2023-09-06 15:35 IST   |   Update On 2023-09-06 15:35:00 IST
  • வழித்தட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது
  • போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி அருகே உள்ள ஜாகீர் நாட்றாம் பள்ளியைச் சேர்ந்தவர் ராமு (வயது52). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் விஜய் (22).

இவர்களுக்குள் பொது வழித்தட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே அவர்க ளுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று ராமு மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த தினேஷ் குமார், சரத்குமார் ஆகியோரை விஜயை தரப்பினரைச் சேர்ந்த வர்கள் குடிபோதையில் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் இருதரப்பி னருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ண கிரி தாலுகா போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தனசேகரன் (29), தினகரன் (27), பிரதீப் குமார் (33), கார்த்திக் (21), மண்ணுகான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News