உள்ளூர் செய்திகள்
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூரில் சி.ஐ.டி.யு. கண்டன ஆர்ப்பாட்டம்
- சுய உதவி குழு என பல ஆண்டுகளாக பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும்.
- தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய தொகை 2 கோடி 31 லட்சம் உடனடியாக செலுத்த வேண்டும்.
கடலூர்:
மாநிலங்களில் 20 வகை நிரந்தர பணியிடங்களில் தனியாருக்கு வழங்கிடும் அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி, கான்ட்ராக்ட், சுய உதவி குழு என பல ஆண்டுகளாக பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். கடலூர் மாநகராட்சியில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய தொகை 2 கோடி 31 லட்சம் உடனடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.