சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்ற காட்சி
சுரண்டையை தூய்மை நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - தலைவர் வள்ளி முருகன் பேச்சு
- பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்
- மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்ப கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-
பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். ஹோட்டல் மற்றும் மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்ப கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். தொடர்ந்து சுரண்டை பகுதியில் ஓட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர் அங்கு நகராட்சி சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, வீரவேல் சிவகுருநாதன், சூப்பர்வைசர் நவநீதகிருஷ்ணன், மதியழகன், சிவா, செல்வக்குமார், மாடசாமி, மகேந்திரன், மாரி செல்வம், சாம், சுந்தரவேல், சுகாதார விழிப்புணர்வு பரப்புரையாளர்கள் சங்கீதா,வனிதா,சலோமியா, பூமாரி, சுசீலா, மகாலட்சுமி, சுகாதார மேற்பார்வையாளர்கள், மற்றும் டி.பி.சி. பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.