உள்ளூர் செய்திகள்

சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-08-31 15:05 IST   |   Update On 2022-08-31 15:05:00 IST
  • இந்த திட்டம் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கபட்டு வழங்கினர்.
  • ஆரம்பப ள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு விருந்தினராக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், எஸ்.எம்.சி. தலைவர் கனிமொழி பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் அருள்மொழி ,சரவணன் அரசு, உதவி தலைமை ஆசிரியர் ராமசந்திரன், ரங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கவும், ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்றங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், ஆரம்பப ள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்த திட்டம் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கபட்டு வழங்கி சூளகிரி ஒன்றியத்தை தமிழகத்திலே சிறந்த சுகாதார ஒன்றியமாக மாற்ற வருங்காலம் சிறக்க மாணவர்களாகிய நீங்களும், பொது மக்களும் இணைந்தாலே போதும் என கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சப் பை விழிப்புணர்வு எற்படுத்தினர்.

Similar News