உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபித்தனர்.

கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் மலரஞ்சலி

Published On 2022-11-02 10:26 GMT   |   Update On 2022-11-02 10:26 GMT
  • கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்த இடத்தில் அவர்களுக்கு மலர் அணிவித்தனர்.
  • பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தி அஞ்சலி.

தஞ்சாவூர்:

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் ஜெபித்து மலர் தூவினர். குடும்பம் குடும்பமாக வந்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து ஜெபம் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்களும் கல்லறைகளுக்கு சென்று ஜெபித்தனர்.

இதே போல் தஞ்சை நகரில் உள்ள பல்வேறு கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News