ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம் நடந்த காட்சி.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
- ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்கோவில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மே 1-ந்தேதி (திங்கள் கிழமை) தேர்த் திருவிழா நடை பெறுகிறது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.
சித்திரை மாதம் உத்திரம் தினத்தன்று மூலவர் ஆதிநாதர் விக்ரகம் ப்ருகு மற்றும் மார்கண்டேய மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (25-ந்தேதி) எம்பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும், 27-ந்தேதி (வியாழக்கிழமை) கருடோத்ஸவம் நிகழ்ச்சியும், மே 1-ந்தேதி (திங்கள் கிழமை) தேர்த் திருவிழாவும்,மே2-ந்தேதி (செவ்வாய்கிழமை) தீர்த்தவாரியும் நடை பெறுகிறது.
தினமும் மாலை சுவாமி பொலிந்து நின்ற பிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம், வெட்டி வேர் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், எம்பெரு மானார் பேரருளாளர், ராமானுஜ ஜீயர், ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் காரிமாறன், கலைக்காப்பக தலைவர் ரெங்கராஜன், முன்னாள் அறங்காவலர் குழுதலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.