உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி நேரு பூங்காவில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்

Published On 2023-01-05 14:30 IST   |   Update On 2023-01-05 14:30:00 IST
  • ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நேற்று நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
  • ஓவியங்களை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்கள் ரசித்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நேற்று நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் வருகையும் அதிகரித்து இருந்தது. சிறுவர் விளையாட்டு பூங்காவில் ஏராளமான குழந்தைகள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ள விளையாட்டு உபகரணங்களில் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள கழிப்பிட சுவற்றில் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ள வனவிலங்குகளின் ஓவியங்களை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்கள் ரசித்தனர்.

Tags:    

Similar News