முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் - தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி போன்று இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற 1-ந் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியக் கழக அமைப்புகள் மூலம் 199 ஊராட்சிகளில் உள்ள கிளைகள், 8 மாநகராட்சி வட்டங்கள், 2 நகராட்சியில் உள்ள 45 வார்டுகள், 12 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகள் முழுவதும் தி.மு.க. கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநல காப்பகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு காலை, மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளன. நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளன.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்களான கிரைண்டர், மிக்சி, சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, வேன் ஓட்டுனர்களுக்கு சீருடை, 5 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. முதலூர் அரசு ஆஸ்பத்திரியில் மார்ச் 1-ந் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மாநகராட்சி 1-வது வட்டத்தில் இலவச கண் மருத்துவ முகாம், 14-வது வட்டத்தில் மரம் நடும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி போன்று இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.