உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 316 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2022-06-27 08:49 GMT   |   Update On 2022-06-27 08:49 GMT
  • சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 316 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
  • வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

கடலூர்:

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் தலைமை தாங்கினார். வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள் தாரணி, சக்திவேல், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகன்யாஶ்ரீ மற்றும் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டனர். வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.  மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்து வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு உள்ளிட்ட 316 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு ரூ 3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 121-க்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News