உள்ளூர் செய்திகள்

கோவையில் நாளை செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-24 12:05 GMT   |   Update On 2022-07-24 12:05 GMT
  • இந்த நிகழ்ச்சியில் 5 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
  • சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடக்கிறது

கோவை,

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்ட கோவை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.

இன்று மாலை 6.30 மணிக்கு உக்கடம் பெரிய குளத்தில் ஹீலியம் பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி கலெக்டர் சமீரன் தலைமையில் நடக்கிறது. அதனை தொடர்ந்து இசைக்குழு மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு பாடல் ஒளிபரப்ப படுகிறது.

நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ரேஸ்கோர்சில் இருந்து கொடிசியா வரை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெறுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பின்னர் கொடிசியாவில் அமைக்கப்பட்டு உள்ள வளைவினை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், ராமச்சந்திரன், கயல்விழி, முத்துசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர்.

இதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் பரத நாட்டியம், சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சி,

செஸ் போட்டிகள், ஒலிம்பியாட் இசை ஆல்பம் எல்.இ.டி. திரையில் வெளியிடுதல், ஒலிம்பிக் மாதிரி ஜோதியினை 14 மாவட்ட பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News