உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.


அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தேரோட்டம்

Published On 2022-12-27 14:39 IST   |   Update On 2022-12-27 14:39:00 IST
  • தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
  • தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் நடைபெற்றது.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மண்டல மகோற்சவ திருவிழாவின் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. மூங்கில் கம்புகளை வைத்து பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக சுவாமி அய்யப்பனின் தங்கவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் என்று அழைக்கப்படும் கருப்பசாமி ஆட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரள மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags:    

Similar News