உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் பரபரப்பு: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- 2 பேர் காயம்

Published On 2022-09-23 12:29 IST   |   Update On 2022-09-23 12:29:00 IST
  • பஸ்சை , டிரைவர் ஆட்சியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
  • தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு பஸ்சான பி.ஆர்.டி.சி, நேற்று பகல், காரைக்கால் எல்லையான அம்பகரத்தூரில் இருந்து காரைக்கால் நோக்கி 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை , டிரைவர் ஆட்சியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார். காரை க்கால் திருநள்ளாறு சாலை யான பச்சூர் அருகே வந்த போது, எதிர் திசையில் மோட்டார் சைக்களில் ஹெல்மெட்டுனுடன் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென பஸ் மீது கல்லை வீசி தாக்குதல் நடத்திவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர். இதில் பஸ்ஸின் முன்புற கண்ணாடி உடைந்து சிதறியது.

சிதறிய கண்ணாடி துண்டுகள், பஸ்சின் முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணி மீதும், டிரைவர் ஆட்சியப்பன் மீது பட்டதில், இருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, இருவரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்றனர். பின்னர், டிரைவர் ஆட்சியப்பன் இது குறித்து, டவுன் போலீஸ் நிலைய த்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News