உள்ளூர் செய்திகள்

 சிறந்த முறையில் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கினைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பயணாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கிய காட்சி.

சிறந்த முறையில் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

Published On 2023-09-26 15:51 IST   |   Update On 2023-09-26 15:51:00 IST
  • தருமபுரியில் காப்பீட்டு ஒருங்கிணைப்பா ளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
  • 10 பயானளிகளுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாவட்ட கலெக்டர் தெரி வித்ததாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவித்தொ கைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 549 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்கள்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிறப்பாக சிகிச்சையளித்த 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2 தனியார் மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த முறையில் பணி யாற்றிய காப்பீட்டு ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் வார்டு மேலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

சிறப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்காக அரசு தருமபுரி மருத்து வக்கல்லூரி மருத்து வமனைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டி, கேடயம் வழங்கியதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சாந்தியை அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்து வமனை மருத்து வர்கள் குழு நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தனித்துணை கலெக்டர் நசீர் இக்பால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வி. மரியம் ரெஜினா, பழங்குடியினர் நல அலுவலர் தி கண்ணன், உதவி திட்ட அலுவலர் தமிழரசன் உட்பட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News