உள்ளூர் செய்திகள்

தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

Published On 2023-03-13 09:46 GMT   |   Update On 2023-03-13 09:46 GMT
  • அழகு நிலையம், உணவகம் அமைத்தல் போன்ற பயிற்சிகளை தர தயாராக உள்ளோம்.
  • அடுத்த 3 மாதம் இலவச பயிற்சி நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வானவில் அறக்கட்டளை அஸ்வினி சீதா பவுண்டேஷன் பெண்கள் திறன் வளர்ப்பு தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் அடிப்படை தேவையான உபகரணங்களும் வழங்கும் விழா கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் பாண்டியன் முன்னிலை வகித்து கருணாநிதி பிறந்தநாளில் ஏழை மகளிர் இரண்டு நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம் தருவதாக உறுதி அளித்தார்.

சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் தேவையான பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரண ங்களை வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டிமேடு ஊராட்சி மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி, பினாயில் தயாரித்தல், ஒயர் கூடை, சாக்குப்பை மேட், அழகு நிலையம், உணவக அமைத்தல் போன்ற பயிற்சிகளை தர தயாராக உள்ளோம் என்றார்.

வானவில் அறக்கட்டளை இயக்குனர் பிரேமாவதி பயிற்சியின் நோக்கம், பயன்கள், சுயதொழில்களால் பொருளாதார முன்னேற்றம் பற்றியும், தொடர்ந்து அடுத்த மூன்று மாத கால இலவச பயிற்சி நடத்த அனுமதியும் வழங்கியுள்ளார்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் வானவில் மேலாளர் சோலைராஜ் வரவேற்புரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்,வானவில் அறக்கட்டளை புனிதா, தையல் ஆசிரியை பத்மா, கண்ணம்மா, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News